national
வெளிய வினாத்தாள் கசிவு… உள்ளே மழை நீர் கசிவு… பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிண்டல்…!
டெல்லியில் கலந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. மேலும் பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி இருந்தது. அதுமட்டுமில்லாமல் பாராளுமன்றத்திற்குள் தண்ணீர் ஒழுகும் வீடியோவை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.
பாராளுமன்றத்தில் தண்ணீர் ஒழுகுவது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன் வைத்தார். அப்போது புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து விசாரணை நடத்த விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அப்போது சமாஜ்வாத் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மழைக்கால கூட்ட தொடரின் எஞ்சிய நேரத்தை பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, பாராளுமன்றத்திற்கு உள்ளே மழை நீர் கசிவு. புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவதற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் மழை நீர் கசிவது தொடர்பாக ஆகிலேஷ் யாதவ் கிண்டலாக பதிவிட்டு இருக்கின்றார்.
அவர் அந்த பதிவில் பழைய பாராளுமன்ற கட்டிடம் இதைவிட சிறந்ததாக இருந்தது. பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சொட்டு நீர் பாசனம் நடக்கின்றது. நாம் ஏன் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்லக்கூடாது. பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடத்திலும் நீர்க்கசிவு என்பது அவர்களின் அற்புதமான வடிவமைப்பின் ஒரு பகுதியா? என பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள். 1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் 120 ரூபாய் மதிப்பிலான பக்கெட்டை நம்பி இருக்கின்றது என்று ஆம் ஆத்மி கட்சியும் கிண்டல் செய்து வருகின்றது.