Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

national

டெல்லி மாநகர பேருந்தில் ராகுல் காந்தி… மக்களுடன் மக்களாக பயணித்த புகைப்படம்…!

ராகுல் காந்தி டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.