Connect with us

முடி வெட்டிய சவரத் தொழிலாளி… சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ராகுல் காந்தி… என்ன தெரியுமா..?

Latest News

முடி வெட்டிய சவரத் தொழிலாளி… சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ராகுல் காந்தி… என்ன தெரியுமா..?

ராகுல் காந்திக்கு முடி வெட்டிய சவரத் தொழிலாளிக்கு அவர் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அனுப்பி இருக்கின்றார்.

ராகுல் காந்தி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அங்கு இருக்கும் பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூன் கடைக்கு சென்று முடிவெட்டிக் கொண்டார்.

அப்போது தனது முடியை வெட்டிய அந்த கடை உரிமையாளர் மிதுனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த வீடியோ பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றது. தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு இரண்டு நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை, இன்வெர்ட்டர் போன்ற பல பொருட்களை ராகுல் காந்தி வாங்கி பரிசாக அனுப்பி வைத்திருக்கின்றார்.

ராகுல் காந்தி முடிவெட்டி 3 மாதம் ஆன பிறகு இந்த பரிசை அவர் அனுப்பி வைத்திருந்தது அந்த சவரத் தொழிலாளிக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக மிதுன் கூறுகையில் மூன்று மாதத்திற்கு பிறகு என்னை நினைவில் வைத்து பரிசை அனுப்பி வைத்துள்ள ராகுல் காந்தி அவருக்கு மிக்க நன்றி என தெரிவித்திருக்கின்றார். மேலும் ராகுல் காந்தி முடிவேட்டிக் கொண்ட வீடியோவும் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

More in Latest News

To Top