Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

national

மோடி மனதளவில் உடைந்து போயிட்டார்… பாடி லாங்வேஜ கவனிச்சீங்களா…? கலாய்த்த ராகுல் காந்தி…!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் தற்போது சூடு பிடித்து வருகின்றது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்களில் வாக்கு பதிவுகள் நடத்தப்பட்டு அக்டோபர் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார்கள். நேற்றைய தினம் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா மற்றும் பருக் அப்துல்லாஹ்ருடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தார்கள்.

இதற்கிடையில் நேற்று ஜம்முவில் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருந்தார். அதில் மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி மனதளவில் மோடியின் நம்பிக்கையை அழித்து விட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்திய கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார். மக்களவைத் தேர்தலுக்கு முன் இருந்த மோடியின் உடல் மொழி தேர்தலுக்குப் பின் மாறிப் போய்விட்டது. இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னர் யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்ட போது ஒரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமானது.

இதுபோன்று முன்பு நடக்கவில்லை. எனவே தான் ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், அச்சத்தை ஒழிப்பது தான் எங்களின் நோக்கம். ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகின்றது”  என்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.