national
தன் நாற்காலியை காப்பாத்திக்க போடப்பட்ட பட்ஜெட் இது… ராகுல் காந்தி விமர்சனம்…!
அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் வகையில் தான் இந்த பட்ஜெட் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து இருக்கின்றார்.
2024 மற்றும் 25 காண பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமானவரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரம்பில் மாற்றம் இல்லை, செல்போன், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கான இறக்குமதி குறைவு, வேளாண் துறை பட்ஜெட்டில் 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் அன்ன யோஜனா திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பட்ஜெட்டை குறித்து விமர்சனம் செய்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் கூறி இருப்பதாவது: “சாதாரண குடி மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை.
அம்பானி மற்றும் அதானி போன்றோருக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கின்றது. பெரும் முதலாளிகளை குஷி படுத்தியும் சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்படாத ஒரு பட்ஜெட்டாக இது இருக்கின்றது. பிற மாநில நலன்களை ஒதுக்கி விட்டு கூட்டாளிகளின் மாநிலங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளை தாஜா செய்ய, மற்ற கட்சிகளை வஞ்சித்திருக்கின்றது. மேலும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும் பட்ஜெட்டாக தான் இந்த பட்ஜெட் அமைந்திருப்பதாக அவர் பதிவிட்டு இருக்கின்றார்.