Connect with us

எங்க அப்பாவ பிடிச்சு ஜெயில்ல போடுங்க… போலீசாரை அதிர வைத்த 5 வயது சிறுவன்…!

national

எங்க அப்பாவ பிடிச்சு ஜெயில்ல போடுங்க… போலீசாரை அதிர வைத்த 5 வயது சிறுவன்…!

குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் கண்டிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாது அளவிற்கு இருக்கின்றது. இந்த காலக் குழந்தைகள் மிகவும் துறுதுறு என்று வாய் துடுக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பல பெற்றோர்கள் அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்கள். இதை பரிணாம வளர்ச்சி என்று கூறுவதா? அல்லது நவநாகரீகம் மாற்றத்தின் விளைவு என்று கூறுவதா தெரியவில்லை.

முன்பெல்லாம் நிலாவை காட்டி, ராஜா ராணி கதைகளை சொல்லி, பாட்டி கதை சொல்லி சோறு ஊட்டினார்கள். இப்போதெல்லாம் செல்போன்களில் வீடியோ கேம்ஸ், பொம்மை படங்கள் போன்றவற்றை காட்டி ஏமாற்றி காரியத்தை சாதிக்க வேண்டி இருக்கின்றது. மேலும் குழந்தைகள் அழுதாலே செல்போன் தான் என்ற அளவிற்கு ஆகிவிட்டது.

அதேபோல் குழந்தைகள் தவறு செய்தால் அதை தைரியமாக தண்டித்த காலமும் இருந்தது. ஆனால் இப்போது தண்டிக்க முடியவில்லை. தவறை சுட்டிக்காட்டினாலே பல குழந்தைகள், பெற்றோர்களுடன் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். தாய் தந்தை பற்றி தாத்தா பாட்டிகளிடம் போட்டுக் கொடுக்கும் சேட்டைகளை செய்து விடுகின்றனர். இந்நிலையில் ஒரு சிறுவன் தன்னை திட்டிய தந்தையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலிஸ் நிலையத்திற்கு சென்ற சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் நிலையத்திற்கு அப்பகுதியை சேர்ந்த 5 வயதில் சிறுவன் சென்றிருக்கின்றார். தனியாக வந்த சிறுவனை பார்த்த போலீசார் ஏதோ வழி தவறி வந்து விட்டான் என்று நினைத்தார்கள். பின்னர் அவனை நாற்காலியில் அமர வைத்து பேச்சு கொடுத்த பிறகு தான் தெரிய வந்திருக்கின்றது அவரின் நோக்கம். மழலை கொஞ்சும் மொழியில் ரசிக்க வைத்த அவர் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி அடைய வைத்தது.

அங்கு வந்த அவர் போலீஸ் அதிகாரியிடம் சார் என் பேரு ஹசைன். எங்க அப்பா இக்பால். அவர் என்னை அடிக்கடி திட்டுகிறார். ரோட்டு பக்கம் போக கூடாது, ஆற்றங்கரை போகக்கூடாது என்று கண்டிஷன் போடுகின்றார். எனக்கு தொந்தரவு கொடுக்கின்றார். என்னை அடிக்கவும் செய்கின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். அவரை ஜெயில்ல போடுங்க எனது புகாரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சிறுவன் தந்தை மீது புகார் அளித்திருக்கின்றார்.

கோபத்தில் பொங்கிய அவனை போலீசார் சிரித்து பேசி சமாதானப்படுத்தினார்கள். பின்னர் அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் தாயிடம் ஒப்படைத்தார்கள் . அந்த சமயத்தில் இக்பால் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரிடம் போலீசார் செல்போனில் பேசி நடந்ததை கூறி மகனிடம் கண்டிப்போடு நடக்காதீர்கள், அன்பாக அறிவுரை கூறுங்கள் என்று பேசி இருந்தார். சிறுவனின் வேடிக்கையான புகாரால் இருந்த அனைவரும் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்ந்தார்கள். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

More in national

To Top