Latest News
புதுச்சேரி சிறுமி கொலை… கைதான நபர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலை தொடர்பாக முத்தியால் பேட்டை போலீசார் போகோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதான கருணாஸ் ஆகியோர் 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புதுச்சேரி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன் சிறையில் உள்ள கழிவறையில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
இது பற்றி தகவல் அறிந்த சிறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விவேகானந்தரின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.