Latest News
ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவிகள்… வெளியில் அமரவைத்து வீடியோ எடுத்து மிரட்டல்… அதிர்ச்சி சம்பவம்…!
ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவிகளை பிரின்ஸ்பல் வெளியில் அமர வைத்து வீடியோ எடுத்து பெற்றோர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில், ஸ்கூல் பீஸ் கட்டாத 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பிரின்சிபல் கொளுத்தும் வெயிலில் அமர வைத்து வீடியோ எடுத்திருக்கின்றார். பீஸ் கட்டவில்லை என்றால் இதுதான் நிலைமை என்று உணர்த்தும் வகையில் அந்த வீடியோவை அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டி இருக்கின்றார்.
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் இயங்கி வரும் சியாம்ராஜி என்ற பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை வெளியில் தள்ளி கதவை சாத்தி இருக்கிறார்கள். மேலும் கொளுத்தும் வெயிலில் கூனிக்குறுகி தங்களை முகத்தை மூடி அமர்ந்திருக்கும் போது பிரின்ஸ்பல் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
மேலும் கல்வி கட்டணம் கட்டாதவர்களை இந்த முறை மன்னிப்பேன் என்றும், ஆனால் இனிமேல் கட்டவில்லை என்றால் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த வீடியோ மூலம் பெற்றோர்களுக்கு பிரின்சிபல் மிரட்டல் விடுத்திருக்கின்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்திருக்கின்றார். இந்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.
#सिद्धार्थनगर
शर्मनाक घटना😡
विद्यालय की मान्यता समाप्त होना चाहिए👉स्कूल प्रबंधक की तानाशाही का वीडियो वायरल, फीस जमा नहीं होने पर बच्चों को अपमानित किया,
👉सैकड़ों बच्चों को रोड पर बैठाकर वीडियो बनाया, श्यामराजी हाईस्कूल के प्रबंधक ने वीडियो वायरल किया,#Siddharthnagar… pic.twitter.com/PcvAeaefT1
— बेसिक शिक्षा: सूचना और सामग्री (@Info_4Education) October 1, 2024