டிசி வாங்க வந்த மாணவனை ஃபீஸ் கட்ட சொல்லி பள்ளியின் பிரின்சிபல் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாறு இருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியரில் இயங்கி வரும் சிபிஎஸ் தனியார் பள்ளி கன்ச் மில் என்கின்ற பகுதியில் இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக தெரிகின்றது. தேர்வில் தோல்வியடைந்த அந்த மாணவன் பள்ளி படிப்பை நிறுத்தி விட முடிவு செய்து இருக்கின்றான்.
அதன்படி பள்ளிக்கு சென்ற மாணவன் தனக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் படி கேட்டு இருக்கின்றான். அப்போது பள்ளியின் பிரின்சிபல் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கி இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார். மேலும் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக மாணவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பள்ளியின் பிரின்சிபல் மற்றும் 2 ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டு அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளான மாணவன் அவர்களிடம் தப்பிக்க ஆசிரியர்களை தள்ளிவிட்டுள்ளார்.
பள்ளியில் இருத்தலும் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த காவல் நிலையம் சென்றது. பின்னர் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் மீது புகார் கொடுத்திருக்கின்றான்.
இதேபோன்று பள்ளி பிரின்சிபல் தரப்பிலும் மாணவன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.











