Latest News
சாலையில் இருந்த பெரிய பள்ளம்… கோமாவில் மனைவி… போலீஸ் கஸ்டடியில் கணவர்… நடந்தது என்ன…?
குண்டும் குழியுமாக இருந்த சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டு மனைவி கோமாவுக்கு சென்றிருக்கின்றார் இதற்கு போலீசார் கணவரை கைது செய்திருக்கின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் கோமாநிலைக்கு சென்றிருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பெண்ணின் கணவரை கைது செய்து இருக்கிறார்கள்.
கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கிய போது கணவனின் பின்பு அமர்ந்திருந்த மனைவி கீழே விழுந்து இருக்கின்றார். இதனால் அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் கோமா நிலையில் சென்று விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலாப் சுக்ளா தெரிவித்திருந்ததாவது காயம் அடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
இந்த குற்றச்சாட்டை செய்த காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விஸ்வகர்மா கூறியதாவது ‘இந்த சாலை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்ற மாநகராட்சிக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். மேலும் அவர்களின் பதிலுக்கு பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இருப்பினும் மனைவி கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்றதற்கு கணவன் தான் காரணம் என போலீசார் குற்றம் சாட்டியிருப்பது அநியாயமானது என்று பலரும் கூறி வருகிறார்கள்.