லீவுக்கு வந்த ராணுவவீரர்… அடித்து நிர்வாணப்படுத்திய போலீஸ்… நேரில் வந்த அமைச்சர்…!

லீவுக்கு வந்த ராணுவவீரர்… அடித்து நிர்வாணப்படுத்திய போலீஸ்… நேரில் வந்த அமைச்சர்…!

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரரை போலீசார் அடித்து துன்புறுத்தி நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த ஒருவர் சொந்த வேலை காரணமாக ஜெய்ப்பூர் வந்திருக்கின்றார். அவரை எந்தவித காரணமும் இல்லாமல் சாஸ்திரி பாத் காவல் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்தனர்.

அங்கு ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். மேலும் அவரிடம் ராணுவம் குறித்து தரக்குறைவாகவும் பேசி இருக்கிறார்கள். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு மாநில தொழில் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த போலீசாரை அழைத்து கண்டித்து இருக்கிறார்கள்.

இது தரக்குறைவான செயல் என்று பேசியிருக்கின்றார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் ராணுவ வீரர் அடித்து துன்புறுத்தப்பட்டது மருத்துவ அறிக்கையில் உறுதியாக இருக்கின்றது. போலீசின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டத்தை மீறி நடந்து கொண்ட அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றார்.