national
கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு தட்டி எழுப்பிய போலீஸ்… கடத்தப்பட்ட நபரின் ரியாக்ஷன்… வைரல் வீடியோ…
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பிரம்மபுரி பகுதியை சேர்ந்த அனுஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் என்ற மலைப்பகுதிக்கு சென்று இருக்கின்றார். அந்த இடத்தில் அனுஜை கண்காணித்த சிலர் அவரது உடையை பார்த்து ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று கருதி அவரை கடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
அதன்படி அவரை வாயில் டேப் ஒட்டி கை கால்களை கட்டி கடத்தி சென்றிருக்கிறார்கள் கடத்தல்காரர்கள். பின்னர் காரில் அழைத்துச் சென்ற போது அவரது நண்பரை பாதி வழியிலேயே இறக்கி விட்டனர். நீண்ட நேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாத காரணத்தால் அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தார்கள்.
அதன்பிறகு போலீசார் அவரது நண்பர் சோனியை விசாரித்த போது ட்ரோன்களை பயன்படுத்தி நஹர்கர் பகுதியில் சோதனை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அனுஜின் பெற்றோருக்கு கடத்தல்காரர்கள் இடமிருந்து போன் வந்தது. தனது மகனை விடுவிப்பதற்காக 20 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் பணம் திரட்ட அனுஜ் பெற்றோர் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.
மேலும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது. ஒரு நாள் கடத்தல்காரர்கள் மீண்டும் அனுஜ் குடும்பத்தை அழைத்து பணம் கேட்டு வந்தபோது கல்கச்-சிமலா எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டியில் உட்காருமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடத்தல்காரர்களை பிடிக்க காவல்துறையினர் பல கட்ட முயற்சிகளை செய்து அவர்களை மடக்கி பிடித்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்திற்கும் மூளையாக செயல்பட்ட வீரேந்திர சிங் என்ற மென்பொருள் பொறியாளரை கைது செய்தனர்.
தலைமறைவான ஒருவரை தேடி வருகிறார்கள். இந்நிலையில் அனுஜ் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஜெய்ப்பூர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார் .ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த போது போலீசார் அவரை மீட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். அவரை கண்டுபிடித்து எழுப்பிய போது ஹாய் என்று கையசைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் அனுஜ் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
'हैलो बेटा..जयपुर पुलिस'😀
ये लड़का जो कंबल हटा के उठा है उसका जयपुर से अपहरण हुआ है, राजस्थान पुलिस ने हिमाचल के सोलन से एक होटल में उसे इस अंदाज में सरप्राइज किया. #Jaipur #Rajshthan #HimachalPradesh #Police #kidnap pic.twitter.com/L0pOAGfIgF
— Deepak Verma (@deepak_ver55507) August 27, 2024