உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது தாஜ்மஹால். தற்போது பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறி வருகின்றது. முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக பார்க்கப்பட்டு வருகின்றது.
உலகம் முழுவதும் இந்த தாஜ்மஹாலை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். தாஜ்மஹால் இதற்கு முன்பு ஒரு இந்து கோயிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோயிலுக்கான அடையாளங்கள் இருந்தது என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தேஜோ மஹால் என அழைக்கப்பட்ட இந்த கோயில்தான் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள். தற்போது கணவர் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் ரத்தோர் என்னும் பெண் கன்வரை தோளில் சுமந்து கொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்று இருக்கின்றார்.
அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது குறித்து கூறிய அவர் தாஜ்மஹால் முன்பு தேஜோ மஹால் என்னும் சிவன் கோயிலாக இருந்தது. சிவபெருமான் தன் கனவில் வந்து கங்கை நீயே நதியின் புனித நீரை அவரது கோயிலில் தெளிக்க சொன்னார். ஆனால் என்னை போலீசார் உள்ளே விடாமல் தடுத்துவிட்டார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

