இரவு 7.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அந்த புகாரை போலீசார் ஏற்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 48 பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இரவு 7.30 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அதனை வீடியோ எடுப்பதற்காக வெளியில் சென்று இருக்கின்றார். அப்போது ஆள் நடமாட்டம் பெரிய அளவில் இல்லாத போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை தகாத முறையில் தீண்டியும் அவர் அணிந்திருந்த ஷர்ட் கிழித்து பாலியல் துண்புறுத்தால் செய்திருக்கின்றார்.
இது தொடர்பாக அந்தப் பெண் போலீசாரிடம் புகார் அளிக்க சென்றிருக்கின்றார். அப்போது போலீசார் அவரிடம் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஏன் சென்றீர்கள் என்று கேட்டு எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்து இருக்கின்றார்.
https://twitter.com/BharatiyaTalk/status/1819657662360940550
இதையடுத்து அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றிய அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த பார்த்த போலீசார் அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

