Latest News
டீக்கடைக்காரரை ஜன்னலில் கட்டி வைத்து அடித்து தாக்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!
டீக்கடைக்காரரை ஜன்னலில் கட்டி வைத்து போலீஸ்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ ஆனது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேசம் மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் காவல் நிலையத்தில் ஒரு ஜன்னலில் ஒருவர் கை கட்டி வைக்கப்பட்ட வீடியோவானது இணையதள பக்கங்களில் வைரலாகி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் எஸ்பிஐ சந்தித்து புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் நான் மல்டிபில் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு எனது கடையில் போதைப்பொருள் விற்பனை செய்தேன் என குற்றம் சாட்டி போலீசார் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஜன்னலில் என்னை கட்டி வைத்து போலீசார் அடித்து உதைத்தனர் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள எஸ்பி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றார்.
मुलताई पुलिस स्टेशन में चाय बेचने वाले को खिड़की की ग्रिल से बांधकर उसकी गर्दन और हाथों के बीच डंडा बांधा गया, पीड़ित को नशीले पदार्थ बेचने के संदेह में गिरफ्तार किया गया था सब इंस्पेक्टर सस्पेंड हुए हैं जांच के आदेश हो गए pic.twitter.com/Fyknanw3Sn
— Anurag Dwary (@Anurag_Dwary) September 21, 2024