கேரளா அரசுடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கின்றார்.
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடத்திற்கு பிரதமர் மோடி கேரளா சென்றார்.
அங்கு நிலச்சரிவு பாதிப்பு அடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி மீட்டு பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கி இருந்தார். இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது “நிலச்சரிவு மீட்பு பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவ தன்னார்வலர்கள், டாக்டர்கள் என அனைவரும் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த பேரிடர் சாதாரணமானது கிடையாது. பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. ஆயிரக்கண நபர்களின் கனவுகளை தகர்த்து இருக்கின்றது. சூழ்நிலையை நேரில் பார்த்தேன். நிவாரண முகாம்களில் உள்ளவர்களையும் காயமடைந்தவர்களையும் சந்தித்தேன். பேரிடர் குறித்த அறிந்தும் முதல்வரை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தேன்.
கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி செய்யும் இறந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என்று உறுதியளிக்கின்றேன். இந்த நேரத்தில் நாம் அனைவருடனும் துணையாக நிற்க வேண்டும். கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும் பணப்பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என்று உறுதியளிக்கிறேன்.