Latest News
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்…!
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி மரியாதையை செலுத்தினார்கள்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தியாகங்கள் மற்றும் அகிம்சை வழி போராட்டங்களை பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்கட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை முதல் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து மகாத்மா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர்கள் மட்டுமல்லாமல் டெல்லி முதல்வரான அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.