national
இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன்… மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்குது… பிரதமர் மோடி நெகிழ்ச்சி…!
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.
பதிலுக்கு சகோதரர்கள் தங்களது சகோதரி வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பரிசுகளை வழங்குவார்கள். உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமில்லாமல் தங்கள் நலனில் அக்கறை கொள்ளும் உறவுகள், அன்புகள் உள்ளங்கள் அனைவருக்கும் பெண்கள் ராக்கி கட்டி மகிழ்வது வழக்கம்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார்கள். பள்ளி மாணவிகள் ராக்கி கட்டும் புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி தனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கின்றார்.