Connect with us

தாஜ்மஹால் மேற்கூரையில் முளைத்த செடிகள்… பராமரிப்பது இல்லையா…? நெட்டிசன்கள் விமர்சனம்…!

Latest News

தாஜ்மஹால் மேற்கூரையில் முளைத்த செடிகள்… பராமரிப்பது இல்லையா…? நெட்டிசன்கள் விமர்சனம்…!

தாஜ்மஹால் மேற்கூரையில் செடிகள் முளைத்துள்ள நிலையில் ஒழுங்காக பராமரிப்பது இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இது உலக அதிசயங்களில் 7-வது அதிசயமாக பார்க்கப்படுகின்றது. ஆக்ராவில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தாஜ்மஹாலின் மேற்கூரையில் ஓட்டை இருப்பதால் நீர்க்கசிவு ஏற்படுவதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள். இந்நிலையில் தாஜ்மஹாலின் மேற்கூரையில் மழையின் காரணமாக செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயணர் ஒருவர் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார்.

இதையடுத்து உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பட்டேல் கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. இந்த செடி 15 நாட்களுக்கு முன்புதான் உருவானது. இது விரைவில் நீக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

More in Latest News

To Top