Latest News
லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு… உடனே பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும்-பவன் கல்யாண்..!
லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற புண்ணிய தளங்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜெகன்மோகன் ஆட்சியில் மாட்டு இறைச்சி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது இந்து மதத்தினர் இடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மதத்தின் மாடு புனிதமான விலங்காக கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாக தங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் பக்தர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இது போன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க வழி ஒன்றை சொல்லி இருக்கின்றார்.
அதாவது ‘நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இது போன்ற பிரச்சனைகளை ஆராய சனாதான தர்ம பாதுகாப்பு வாரியம் என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என தனது சமூக வலைதள பக்கத்தில் கூட்டணியில் இருக்கும் பாஜக அரசுக்கு யோசனை ஒன்றை வழங்கியிருக்கின்றார்’ இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.