Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News national

படிக்கட்டில் நிக்காதீங்க என்று சொன்னவருக்கு கத்தி குத்து… அலறி அடித்த பயணிகள்… வைரலாகும் வீடியோ…!

படிக்கட்டில் நிற்காதீர்கள் என்று சொன்ன பஸ் கண்டக்டருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று மாலை அரசு பேருந்தில் ஏறிய ஹர்ஷா சின்ஹா என்கின்ற 25 வயதான இளைஞன் படிக்கட்டு நின்று கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த பஸ் கண்டக்டர் 45 வயதான யோகேஷ் படிக்கத்தில் நிற்காமல் உள்ளே வந்து அமரும்படி அறிவுறுத்தி இருக்கின்றார். ஆனால் கண்டக்டர் சொல்வதைக் கேட்காமல் அந்த இளைஞர் தொடர்ந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்திருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் பஸ் கண்டக்டர் உள்ளே வந்து அமரும்படி கூறிக் கொண்டிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞன் பஸ் கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றிலேயே குத்தி இருக்கின்றார். இதனால் பஸ்ஸில் பயணித்த மற்ற பயணிகள் அலறியடித்து ஓடி உள்ளனர்.

மேலும் மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டு இருக்கின்றார். கத்தியை காட்டி மிரட்டி அனைவரையும் பஸ்ஸிலிருந்து இறங்க வைத்துவிட்டு அவர் தப்பி ஓட முயற்சி செய்திருக்கின்றார். பஸ் ஓட்டுநர் புத்திசாலித்தனமாக பஸ்ஸின் ஆட்டோமேட்டிக் கதவை லாக் செய்துவிட்டு வெளியே குதித்துள்ளார்.

பின்னர் உள்ளே மாட்டிக்கொண்ட அந்த இளைஞர் கோடாரியால் பஸ்ஸை சேதப்படுத்தினார். இந்த சம்பவம் ஒயிட் ஃபீல்டு பகுதியில் உள்ள வைதேகி சர்க்கிள் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இளைஞரை கைது செய்திருக்கின்றனர். கத்தியால் தாக்கப்பட்ட கண்டக்டர் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.