Connect with us

பாராசிட்டமல் உள்ளிட்ட 53 மருந்துகள் சோதனையில் தோல்வி… வெளியான அதிர்ச்சி தகவல்…!

Latest News

பாராசிட்டமல் உள்ளிட்ட 53 மருந்துகள் சோதனையில் தோல்வி… வெளியான அதிர்ச்சி தகவல்…!

பாராசிட்டமல் உள்ளிட்டா 53 மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தினசரி வாழ்க்கையில் உணவு எடுத்துக் கொள்கிறோமோ இல்லையோ மருந்து மாத்திரைகள் இல்லாமல் அன்றைய பொழுதே செல்வதில்லை, ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்துகளை உட்கொள்கின்றோம். தலைவலி போன்ற அனைத்து பாதிப்புகளுக்கும் பாராசிட்டமல் பரிந்துரைக்கப்படுகின்றது.

தலைவலி வந்தாலோ, சளி காய்ச்சல் இருந்தாலோ, மருத்துவரை அணுகாமல் உடனே பாராசிட்டங்களை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கின்றது. இப்படி நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் தரமானதாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் தரமானதாக இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

சர்க்கரை, உயர் அழுத்த மாத்திரைகள் உட்பட 53 க்கும் அதிகமான மாத்திரைகள் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வி அடைந்திருக்கின்றது. மேலும் இந்த மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கி இருக்கின்றது. அதன்படி

* வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால்

* வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள்

* ஆன்டிஆசிட் பேன்-டி

* பாராசிட்டமால் ஐபி 500மிகி

* நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு

* உயர் இரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் மற்றும் பல.

பாராசிட்டமில் மாத்திரைகளும் தரமற்றவையாக இருப்பது இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் இவற்றை எடுக்கக் கூடாது என்று மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்து இருக்கின்றது.

More in Latest News

To Top