பத்ம விருதுகள் 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “2025 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப பரிந்துரை நடைமுறைகள் மே ஒன்றாம் தேதி முதல் தொடங்கியிருக்கின்றது.
அதன்படி பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி வரும் 15ஆம் தேதி ஆகும். பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் பரிந்துரைகளை தேசிய விருதுகள் தளமான https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.