Latest News
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி… பெரும் அதிர்ச்சி…!
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம் பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் படுவேகமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகின்றது.
மேலும் விமான நிலையத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டிலிருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அதன் அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய அந்த இளைஞருக்கு குரங்கம்மை இருப்பது உறுதியாக இருக்கின்றது என மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் இளைஞருக்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொற்று கிளேட் 2 வகையை சார்ந்தது எனவும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள கிளேட் 1 வகையை சார்ந்தது இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வகை நோய் தொற்று 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.