ஓணம் பண்டிகை ஸ்பெஷல்… சென்னை டு கேரளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள்…!

ஓணம் பண்டிகை ஸ்பெஷல்… சென்னை டு கேரளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள்…!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் செயல்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து இருக்கின்றது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது “சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8:30 மங்களூரு சென்றடையும்.

மறு மார்க்க மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6:45 புறப்படும் ரயில் அதற்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 1:30 கண்ணூர் சென்றடையும்.

மறு மார்க்கமாக கண்ணூரிலிருந்து திங்கட்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டையம், கொல்லம் வழியாக இயக்கப்படுகின்றது. இந்த ரயில் மறு மார்க்கமாக இயக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.