national
கையில் ட்ரிப்ஸ், விடுதியில் நர்சிங் மாணவி மர்மமாக மரணம்… நடந்தது என்ன..?
டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 22 வயதான நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அறையின் உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து இருந்தார். பக்கத்தில் இருந்த சீலிங் ஃபேனில் இரண்டு ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு அவளது கையில் ஊசி சொருகி டிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் சம்பவ இடத்தில் எந்த ஒரு தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை. தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.