---Advertisement---

அசைவு உணவு வேண்டாம்… நொய்டாப் பள்ளியின் புதிய விதிமுறை… சர்ச்சையான சம்பவம்…!

Published on: August 9, 2024
---Advertisement---

உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் இருக்கும் செக்டர் 132 பகுதியில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக அந்த பள்ளியில் பயிலும் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக ஒரு சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் அசைவ உணவுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அசைவ உணவுகளை அதிகாலையிலேயே சமைத்து டிபன் பாக்ஸில் வைத்து அனுப்புவது, மதிய நேரத்திற்குள் அந்த உணவு கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதன் காரணமாக இத்தகைய விதிமுறையை ஏற்படுத்துவதாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்து இருந்தது.

இதை ஒரு கோரிக்கையாக மட்டுமே பெற்றோர்களிடம் முன் வைப்பதாகவும், சைவ உணவுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பலதரப்பட்ட மாணவர் சமுதாயத்திற்கு மரியாதை அளிப்பதாகவும் இருக்கக் கூடும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த புதிய விதிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவரின் உணவு பழக்கவழக்கம் எப்படி மரியாதை மற்றும் அனைவரின் உள்ளடக்கிய தன்மையை பாதிக்கும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முறையாக சமைக்காத சேமிக்காது எந்த உணவாக இருந்தாலும் அது கெட்டுப் போகத்தான் செய்யும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதே சமயம் பள்ளி நிர்வாகத்தின் புதிய விதிமுறைக்கு ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சைவ உணவுகளை சாப்பிட தங்களுக்கு விருப்பம் இருந்தாலும் அதை கட்டாயப்படுத்தக் கூடாது என மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

পড়তে ভুলবেন না