national
வினாத்தாள் லீக்… நீட் மறு தேர்வு கிடையாது… உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!
நீட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே லீக்கானதாக குற்றச்சாட்டப்பட்டு அதில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றதாக பல மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதிய பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று தலைமை நீதிபதியான ஒய் சந்திர சூட் தலைமையிலான அமைப்பு விசாரணை செய்தது. இந்த விசாரணையின் போது நீட் மறு தேர்வு என்பது வைக்க முடியாது.
தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது. சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்த ஒரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தாள் லீக் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு 23.33 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்கள் தங்களின் சொந்த ஊரிலிருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோமீட்டர் கடந்து வர வேண்டிய சூழல் ஏற்படும்.
இது சாத்தியமில்லாதது. மேலும் ஒட்டுமொத்த சிஸ்டமும் மீறப்பட்டுள்ளது அல்லது தேர்வின் புனிதம் மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு தற்போதைய நிலையில் வருவது என்பது மிக கடினம் என நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது.