மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கின்றது.
பொதுவாக பட்டமளிப்பு விழாவின் போது எப்போதும் கருப்பு நிற ஆடை அணியப்படும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த கருப்பு நிற ஆடை. அதனால் இந்த காலணி ஆதிக்கம் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் கருப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கின்றது.

