national
அடேங்கப்பா ரூ.2331 கோடியா..? மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள் செய்த அதிரடி நடவடிக்கை..!
கடந்த 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் 2331 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
2024 ஆம் நிதியாண்டில் தனி நபர் வங்கி கணக்குகளில் மாதாந்திரம் குறைந்தபட்ச வைய்ப்புத் தொகை இருக்க வேண்டும். அதாவது அதனை மினிமம் பேலன்ஸ் என்று கூறுவார்கள். இது இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே 231 கோடி என்று மத்திய நிதித்துறை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்து இருக்கின்றார்.
இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும். அதிலும் அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கி பணியாளர்களிடமிருந்து மட்டும் மொத்தமாக 633 கோடியும், பேங்க் ஆப் பரோடா பயனாளர்களிடமிருந்து 386 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி இடங்களை பொறுத்து மாறுபடும்.
முறையாக மினிமம் பேலன்ஸ் இல்லாமல் வங்கி கணக்குகளில் அடுத்த முறை பரிவர்த்தனை செய்யும் போது அதிலிருந்து அபராத தொகை பிடித்தம் செய்யப்படுகின்றது. இதனால் மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த காலங்களில் மினிமம் பேலன்ஸ் பெரிதும் வலியுறுத்தாத வங்கிகள் சமீப காலமாக மிகவும் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.