இந்தியாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற வதந்திகளுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இப்போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அபாயகரத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஊரடங்கு நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல இந்தியாவிலும் ஊரடங்கு 21 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என சொல்லப்பட்டது. அதை மறுக்கும் விதமாக மத்திய அரசுக்கு தற்போது வரை அந்த திட்டம் இல்லை என அறிவித்துள்ளது.