national
மத்திய பட்ஜெட்… எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை… நிர்மலா சீதாராமன் பதிலடி…!
பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடாததால் அது புறக்கணிப்பு என்று அர்த்தமா என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கின்றார். இன்று மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும் போது பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை, அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவே இல்லை. இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று கூறினார்கள். அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “பட்ஜெட்டில் எந்த மாநிலங்களையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை.
எல்லாம் மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனது பதிலுரையை கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கிறார்கள். முந்தைய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிட்டப்பட்டதா? எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை.
மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக அது புறக்கணிப்பு என்று ஆகாது. இடைக்கால பட்ஜெட் பொது பட்ஜெட்டில் மராட்டியம் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் அங்கு ஏழாயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டு வருகின்றது. பட்ஜெட்டின் மாநிலங்களின் பெயரை குறிப்பிட விட்டாலும் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சென்றடையும் என்று தெரிவித்து இருக்கின்றார்.