national
மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் சிக்கன் குனியாவை ஒத்தி இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவி வருகின்றது. வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்றவர்களுக்கும் இது பரவி வருவதால் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள்.
இவர்கள் பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . மூன்று நான்கு நாட்களுக்கு காய்ச்சல் இருந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையாமல் இருக்கின்றது. நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு மூட்டு வலியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி அடைந்து வருகிறார்கள்.
காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இரண்டு வாரத்திற்கும் மேல் மூட்டு வலி இருந்ததால் குறைந்த அளவு ஸ்டெராய்டு மருந்து கொடுத்தால் நிவாரணம் பெறலாம் என்று நுரையீரல் நிபுணர் டாக்டர் சீனிவாச ராவ் தெரிவித்திருக்கின்றார். நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜிவகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அவர் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது ஆந்திர பிரதேசத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.