national
நாடு முழுவதும் வழுக்கும் மருத்துவர்கள் போராட்டம்… நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு…!
கொல்கத்தா ஆர்ஜி கர் என்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் இது தொடர்பான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கொல்லப்பட்ட பெண் மருத்துவர் நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டம் கலவரமாக மாறியது, குற்றவாளி கைது செய்யப்பட்ட போதிலும் போராட்டம் ஓய்ந்த பாடு இல்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது. பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றும் தொடர்ந்து காலை 6 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதற்காக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் எமர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம் போல் நடைபெறும் வெளிநோயாளி பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை நடைபெறாது என அறிவித்திருந்தது.
பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி ரெசிடென்ட் டாக்டர் அசோசியேஷன் உள்ளிட்டவை நேற்று காலை முதல் காலவரையின்றி தனது சேவைகளை நிறுத்தி இருக்கின்றது. தொடர்ந்து பல மாநிலங்களில் போராட்டங்கள் வழித்து வருகின்றன. மேலும் ஏகப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்கள் நேற்று முதல் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தபடி இன்று காலை 6 மணி முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.