national
போட்டி தேர்வுகள் மூலம் தேசிய தேர்வு முகமைக்கு இத்தனை கோடி வருமானமா…? வெளியான தகவல்…!
2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான CUET தேர்வு, பொறியியல் படிப்புக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகின்றது.
2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு நடத்தும் தேர்வுகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இந்த கட்டணம் மூலமாக 3513 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பி விவேக் கே எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மகும்தார் பதிலளிக்கும் போது இந்த தகவலை தெரிவித்து இருக்கின்றார்.
ஈட்டிய தொகையில் 87.2% தேர்வுகள் நடத்துவதற்கு செலவிடப்பட்டது என்றும் தெரிவித்து இருக்கின்றார். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த CUET தேர்வுக்கு பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.