national
எமர்ஜென்சி காலத்தில் இருந்தே… இந்தியர்கள் அந்த விஷயத்துல கவனம் செலுத்தியதே இல்ல-நாராயணமூர்த்தி!…
இந்தியாவில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி. இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதை குறித்து பேசி இருக்கின்றார். மோதிலால் நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நாராயணமூர்த்தி.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியா மக்கள் தொகை, தனிநபர் நிலை இருப்பு மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றது. இந்த அவசர காலகட்டத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை பற்றி நாம் கவலைப்படுவது கிடையாது. இதே போன்ற சூழ்நிலை இன்னும் சில வருடங்கள் தொடர்ந்தால் இந்தியாவில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனி நபர் நிலை இருப்பு அதிகமாக இருக்கின்றது. இதை கருத்தில் கொண்டு அனைவரும் சிந்திக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமை மற்றும் பொறுப்பு. ஒரு தலைமுறை இவ்வாறு தியாகம் செய்தால்தான், அடுத்து வரும் தலைமுறை வாழ்வாதாரம் அதிகரிக்கும். என் பெற்றோர்கள், சொந்தங்கள், ஆசிரியர்கள் செய்த தியாகத்தால் தான் இன்று உங்கள் முன் நான் சிறப்பு விருந்தினராக நிற்கின்றேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.