1200 கிலோமீட்டர்… தீவிர ரசிகனாக இருப்பார் போலயே… டென்ட் போட்டு தங்கி டோனியை சந்தித்த ரசிகர்…!

1200 கிலோமீட்டர்… தீவிர ரசிகனாக இருப்பார் போலயே… டென்ட் போட்டு தங்கி டோனியை சந்தித்த ரசிகர்…!

1200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து டோனியின் ரசிகர் ஒருவர் அவரை சந்தித்த சம்பவம் நடந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் எம் எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றார். உலகம் முழுவதும் எம்.எஸ். தோனி-க்கு மிக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தோனியை எப்படியாவது ஒரு முறை சந்தித்து விட வேண்டும் என்று அவரின் ரசிகர்களுக்கு ஆசை இருக்கும்.

அப்படி ஆசைப்பட்ட ரசிகர் ஒருவர் டெல்லியில் இருந்து 1200 km சைக்கிளில் பயணம் செய்து ராஞ்சி வந்தடைந்துள்ளார். ராஞ்சியில் எம் எஸ் தோனியின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கிய ரசிகர் தோனியை சந்திக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்க தொடங்கி இருக்கின்றார். அவரின் பெயர் கௌரவ்குமார்.

தனது சைக்கிளின் மூலம் பயணம் செய்யத் தொடங்கிய அவர் ஒவ்வொரு முறையும் சமூக வலைதள பக்கங்களில் தோனியை பார்க்கும் முயற்சியை பதிவிட்டு வந்திருக்கின்றார். கிட்டத்தட்ட 5 நாட்கள் வரை எம் எஸ் தோனியை சந்திக்க அவரின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கி இருக்கின்றார். பின்னர் ஒருவழியாக தோனியை சந்தித்து விட்டதாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கின்றார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர் நான் முதலில் டெல்லியில் இருந்து சென்னை பயணம் செய்து டோனியை சந்திக்க சென்றேன். ஆனால் அங்கு அவரை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால் மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்தேன். டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு பயணம் செய்து ஐந்து-ஆறு நாட்கள் காத்திருந்து அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என் வாழ்க்கையில் அடுத்த பயணத்தை துவங்குகிறேன் என்று பதிவிட்டு இருக்கின்றார்.