குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரிலீஸ்… தாயை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்…!

குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரிலீஸ்… தாயை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்…!

குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் செய்த தாயை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் மக்கள் அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் தாங்கள் பிரபலமாகிவிடலாம் என எண்ணுகிறார்கள். ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்று வருகின்றது.

மலையின் உச்சியில் சென்று ரீல்ஸ் எடுப்பது, தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிணற்றுக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகளை செய்து ரீல்ஸ் எடுக்கின்றார்.

அப்போது அவரின் காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அவளது குழந்தை இருக்கின்றது. சிறிது கைநழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும். ஆனால் குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாத அந்த தாய் ரீல்ஸ் எடுத்து இருக்கின்றார். இதை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த வீடியோவானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.