பட்டப் பகலில் மகனை வாளால் தாக்கிய மூன்று நபர்களை பெண் ஒருவர் கல்லை வீசி விரட்டி அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் ஜெய்ஹிந்த்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்றரை மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது. சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில் ஒரு பெண், ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் தாய் மகன் இருவரும் நின்று கொண்டிருக்கும் இடத்தை தாண்டி அவர்களது வண்டியை நிறுத்தினார்கள்.
மூன்று பேரில் ஒருவர் தன்னிடம் இருந்த வாலை எடுத்து வந்து ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த நபரை தாக்கம் முற்படுகின்றார். அப்போது பாதிக்கப்பட்டவரின் தாய் ஒரு கல்லை எடுத்து தாக்கியவர்களை விரட்டினார். அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து நடைபாதையில் இருக்கும் கற்களை எடுத்து தங்களை கொல்ல வந்தவர்களை நோக்கி வீசுகின்றனர்.
இதையடுத்து அவர்கள் தாக்குதலை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள். மகனை வாளால் தாக்க வந்தவர்களை கல்வீசி விரட்டி அடித்த தாயின் துணிச்சல் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகின்றது. தாக்கப்பட்ட நபர் சுனில் ராமபால்மணி என்று தெரிய வந்திருக்கின்றது. அவர்கள் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
https://twitter.com/MotabhaiXX/status/1825543529420173542