Latest News
6 வயது சிறுமியை… கொடூரனின் பிடியிலிருந்து தக்க சமயத்தில் காப்பாற்றிய குரங்கு கூட்டம் …!
6 வயது சிறுவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்கு கூட்டம் தடுத்து நிறுத்தி அவரை விரட்டியுள்ளது .
உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிப்பதற்கு போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறிய போது குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முயற்சி செய்திருக்கின்றார்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் ஓடிவிட்டார். அவர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பார்த்து மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமியை வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் பழைய கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்துக்கொண்டு சென்று பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்டபோது கூட்டமாக வந்த குரங்குகள் தாக்குதல் நடத்தி அவரை விரட்டியடித்தது. இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடி சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்து இருக்கின்றார்.
இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி சிறுமியை அழைத்து செல்வது பதிவாகி இருக்கின்றது. இந்த காட்சிகளை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள்.