மீண்டும் இன்று மக்களிடம் பேசுகிறார் மோடி? எதிர்பார்ப்பை ஏற்றிய தகவல்!

மீண்டும் இன்று மக்களிடம் பேசுகிறார் மோடி? எதிர்பார்ப்பை ஏற்றிய தகவல்!

இந்திய பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு மீண்டும் மக்களிடம் பேச இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மோடி மீண்டும் நான்காவது முறையாக மக்களிடம் உரையாட இருக்கிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நாளை காலை 9 மணிக்கு.  ஒரு சிறிய வீடியோ மூலம் இந்திய மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மோடி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்று மக்கள் மனதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.