Latest News
வந்தே பாரத் ரயிலின் ஜன்னலை சுத்தியலால் உடைத்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!
வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை சுத்தியல் கொண்டு ஒரு நபர் உடைத்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ சில நிமிடங்கள் ஓடுகின்றது. அதில் நின்று கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை வாலிபர் ஒருவர் சுத்தியலை கொண்டு உடைக்கும் காட்சி இடம் பெற்று இருக்கின்றது.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட அமர் பிரசாத் ரெட்டி கடுமையான தண்டனை கட்டாயம் தேவை என்று பதிவிட்டு இருக்கின்றார்.
இந்த வீடியோ எப்போது மற்றும் எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ இதோ..
View this post on Instagram