national
போனிலேயே மனைவிக்கு முத்தலாக்… குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!
ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்த நபர் ரெஹ்மான் இவருக்கு 35 வயதாகின்றது. இவரின் மனைவி ஃபரீனா பானு, இவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். ரஹ்மான் வேலைக்காக குவைத் சென்றிருந்தார். குவைத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மேவிஷ் என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த அவர் போனிலேயே மூன்று முறை தலாக் கூறி மனைவியைக் விவாகரத்து வழங்கி இருக்கின்றார். அதன் பிறகு பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றார். பாகிஸ்தான் பெண் கடந்த மாதம் சுருவில் உள்ள ரெஹ்மான் வீட்டிற்கு வந்திருக்கின்றார்.
சுற்றுலா விசாவில் வந்த அவர் ரகுமான் வீட்டிலேயே தங்கி இருக்கின்றார். ரெஹ்மானின் மனைவி பரிதா பானு கணவர் வீட்டிற்கு சென்றபோது அங்கு மேவிஷ் இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் தனக்கு போனிலேயே முத்தலாக் கூறிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார் என்று புகார் கொடுத்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து குவைத்தில் இருந்து நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தார். ரஹ்மானே போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.