Connect with us

வளர்ப்பு நாயை கிண்டல் செய்ததால்… 5 வயது சிறுவனை வெறிபிடித்து அடித்த ஓனர்… வைரல் வீடியோ…!

Latest News

வளர்ப்பு நாயை கிண்டல் செய்ததால்… 5 வயது சிறுவனை வெறிபிடித்து அடித்த ஓனர்… வைரல் வீடியோ…!

வளர்ப்பு நாயை கிண்டல் செய்த காரணத்திற்காக 5 வயது சிறுவனை ஓனர் தூக்கி போட்டு மிதித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் 5 வயது சிறுவனை ஒரு நபர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்று பார்த்தால் பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் தனது வளர்ப்பு நாயை வாக்கிங்-க்கு கூட்டி சென்று இருக்கின்றார். அப்போது அந்த பக்கம் டியூஷன் முடித்துக் கொண்டு இரண்டு சிறுவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுவர்களை பார்த்தவுடன் நாய் குறைக்க தொடங்கியது. அதில் ஒரு ஐந்து வயது சிறுவன் நாய் தன்னை பார்த்து குறைப்பது போல் நானும் நாயைப் பார்த்து குறைகின்றேன் என்கின்ற விதமாக குரல் எழுப்பி இருக்கின்றான். தனது செல்லப்பிராணியை அந்த சிறுவன் கேலி செய்து விட்டான் என்று ஆத்திரமடைந்த நாயின் ஓனர் சிறுவன் என்று கூட பார்க்காமல் வெறி பிடித்தது போல் அவனை சரமாரியாக தாக்கி இருக்கின்றான்.

சிறுவனை தரையில் தூக்கி வீசி காலால் எட்டி மிதித்து இருக்கின்றார். இந்த வீடியோவானது அங்கிருந்து சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சிறுவனை தாக்கிய நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

Continue Reading
You may also like...

More in Latest News

To Top