Latest News
இன்ஸ்டா ரீல்ஸ்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!
இன்ஸ்டா ரிலீஸ்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிப்பதற்கு பலரும் போராடி வருகிறார்கள்.
இதனால் உயிருக்கு ஆபத்தான சில முயற்சிகளை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள். இன்ஸ்டா பக்கத்தில் குவிக்க போராடும் பலர் ரயில்களில் சிக்கியோ பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிருக்கு ஆபத்தான சம்பவங்களை செய்து நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் உயிரிழந்ததைப் போல ஒரு இளைஞர் நடித்து லைக்குகளை குவிக்க முயன்ற வீடியோவானது இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் போலீசில் வசமாக சிக்கி இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோவை எடுத்திருக்கின்றார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து முகேஷ் குமாரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.