national
ரொம்ப சீரியஸா கேட்கிறேன்… இதுதான் உங்க ஆட்சியா..? ரயில் விபத்து மம்தா கடும் கண்டனம்…!
மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் எண் 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இன்று அதிகாலை 3 40 மணியளவில் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்திற்கு அருகில் சரக்கு ரயிலுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 20 நபர்கள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகின்றது. மத்திய அரசின் அலட்சியப் போக்குதான் இப்படி நடைபெறுவதற்கு காரணம். உங்களின் அலட்சியப் போக்குக்கு முடிவு என்பதை இல்லையா? கேள்வி எழுப்பியிருக்கின்றார் மம்தா பானர்ஜி.
விபத்துக்கள் குறித்து மம்தா பானர்ஜி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது: “இதுதான் ஆட்சியா? ரயில் விபத்துக்கள் நடப்பது என்பது வழக்கமாகிவிட்டது. வாரவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நான் சீரியஸாக கேட்கின்றேன். இது உண்மையில் ஆட்சி தானா? எத்தனை காலம் இதை எல்லாம் பொறுத்துக் கொள்வது” என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார் மம்தா பானர்ஜி.