மாலத்தீவு அதிபர் காதல் சின்னமான தாஜ்மஹால் முன்பு தனது காதல் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மாலத்தீவு அதிபரான முகம்மது முய்சு தனது மனைவி சஜிதா முகமது உடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்தடைந்தார். நேற்று இந்தியா வந்தவுடன் முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதில் நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்ட் அறிமுகம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஏற்பாடு பாதை திறப்பு உள்ளிட்ட பல ஆவணங்களில் இரு தரப்பினர்களும் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டு கொண்டார்கள்.
இதை தொடர்ந்து இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர் ஆக்ராவிற்கு தனி விமானம் மூலமாக சென்றிருக்கின்றார். அங்கு அமைச்சர் யோகேந்திர உபாத்யாய்யை சந்தித்தார். பின்னர் யோகேந்திரா அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து உலக அதிசயங்களில் ஒன்றாகவும் காதல் சின்னமாக விளங்கும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை தனது மனைவியுடன் சென்று சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி தொடங்கி 10 மணி வரை தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.