மலையாள சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்படுவதாக இளம் நடிகர் புகார் அளித்திருக்கின்றார். மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த சம்பவங்களை புகாராக அளிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது.
படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பேசிய அவர் எனக்கு நன்றாக தெரிந்த இயக்குனர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். பிறகு அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் முகத்தில் அறைந்து விட்டு கிளம்பி விட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.











