Connect with us

தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர்… ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா…?

Latest News

தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர்… ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா…?

ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது ரயிலை கவிழ்ப்பதற்கு சதித்திட்டமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் லூப் லைன் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ஒன்று இருப்பதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக பிரேக் போட்டு அந்த விபத்தை தவிர்த்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர் .உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காலிந்து எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இது போன்ற ஒரு கேஸ் சிலிண்டர் கிடந்தது.

இதில் ரயில் மோதியவுடன் பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதால் ரயிலின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தியிருந்தார். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார்கள். அப்போது ரயில் தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

More in Latest News

To Top