national
இப்ப காதல் இல்லனாலும்… விருப்பத்துடன் நடந்தது எப்படி பலாத்காரம் ஆகும்…? உயர்நீதிமன்றம் கேள்வி…!
பாலியல் உறவுக்குப் பின் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில் விருப்பத்துடன் நடந்தது பலாத்காரம் ஆகாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பெண் ஒருவர் ஒரு ஆணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், உடல் ரீதியான உறவிலும் இருந்து வந்துள்ளார். அதற்குப் பிறகு அந்த ஆண் அவரிடம் இருந்து விலகி வேறொரு பெண்ணை காதல் செய்து வந்திருக்கின்றார். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்தப் பெண் அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வக்கீல் நீதிமன்றத்தில் தன் கட்சிக்காரர் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் தனது கட்சிக்காரரை கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஆறு வருட காலமாக பாலியல் உறவு வைத்து அதன் பின்னர் பிரிந்து சென்றுள்ளார் என்ற வாதத்தை முன் வைத்தார்.
இதை கேட்ட நீதிபதி அந்தப் பெண் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375 கீழ் வராது என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். அவர்களுக்கிடையில் தற்போது காதல் இல்லை என்பதற்காக இதற்கு முன்பு அவர்கள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டது எப்படி பாலியல் பலாத்காரம் ஆகும் என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.